2023ஆம் ஆண்டில் 10 இலட்சத்து 55 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள், இலங்கை வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் 2 இலட்சத்து 60 ஆயிரம் இந்திய சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருவார்கள் என எதிர்ப்பார்ப்பதாகவும் அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 545 பேர் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர்.அத்துடன், பெப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் 18 ஆயிரம் பேர் இலங்கை வந்துள்ளனர்.
2019ஆம் ஆண்டு கொரோனா பரவல் ஏற்படுவதற்கு முன்னர், இலங்கைக்கு 1.9 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் வந்தனர். அந்த ஆண்டில் இந்தியாவிலிருந்து 3 இலட்சத்து 55 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் இலங்கை வந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.