Mein Schiff 5 என்ற பயணிகள் சொகுசு கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்துள்ளது. இது கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தில் நங்கூரமிட்டுள்ளது என சுற்றுலா துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கப்பலில் 2030 வெளிநாட்டு பயணிகளும் 945 பணியாளர்களும் உள்ளனர் என்றும் பெரும்பாலான பயணிகள் ஐரோப்பியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் சுற்றுலா பயணிகளை இறக்கிய பின் இங்கிருந்து 30ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சென்று அங்கிருந்து சுற்றுலா பயணிகளுடன் நாட்டை விட்டு வெளியேறும்.
டுபாயிலிருந்து சுயஸ் கால்வாய் வழியாக புறப்பட்டு இலங்கை மற்றும் மலேசியா வழியாக சிங்கப்பூருக்கு பயணிக்கிறது.
இதேவேளை மேலும் 8 கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளன.