குறைந்த விலையில் பாடசாலை மாணவர்களுக்கு பயிற்சி புத்தகங்கள் வழங்குவது குறித்து ஆராய்வு.

ஊடகங்களில் வெளியான பாடசாலை உபகரணங்களின் விலை மும்மடங்காக வெளியிடப்பட்டதனையடுத்து இச்செய்தி தொடர்பில் கவனம் செலுத்திய கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, உரிய அதிகாரிகளை அழைத்து விசேட அவசர கலந்துரையாடலை நடாத்தி, குறைந்த விலையில் மாணவர்களுக்கு பயிற்சி புத்தகங்களை வழங்கும் வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்தார்.

அந்த கலந்துரையாடலில் அரச வங்கியில் கடன் வசதி பெற்று பயிற்சி புத்தகங்களை அச்சிடப்போவதாக அமைச்சர் அறிவித்துள்ளார். மானிய விலையிலும் பயிற்சிப் புத்தகங்கள் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையை இன்று (18ம் திகதிக்குள் கல்வி அமைச்சிடம் ஒப்படைக்குமாறும் அரச அச்சக கூட்டுத்தாபனத்திற்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, பயிற்சி புத்தகங்கள் மற்றும் பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு நான்கு அதிநவீன அச்சு இயந்திரங்களை அரச அச்சக கூட்டுத்தாபனத்திற்கு கொள்வனவு செய்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அது முன்னாள் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இருந்த காலத்தில். பயிற்சி புத்தகங்களை அச்சிடுவதற்கு தேவையான இயந்திரம் தவிர, மற்ற மூன்று இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டதாக, அரசு அச்சக சட்ட மயமாக்கப்பட்ட கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பினரா ஜெயவர்தன தெரிவித்தார்.

இந்த இயந்திரத்தை இலங்கைக்குக் கொண்டு வந்து பயிற்சிப் புத்தகங்களை அச்சிட்டால் முப்பது ரூபாவுக்கும் குறைவான விலையில் 40 பக்கங்களைக் கொண்ட பயிற்சிப் புத்தகங்களை வழங்க முடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

2021 ஆம் ஆண்டில், மதிப்பிடப்பட்ட தொகை 200 மில்லியன் ரூபாய். ஆனால் தற்போது அந்த தொகை சுமார் 300 மில்லியன் ரூபாவாக மாறியுள்ளது. இந்த இயந்திரத்தை இலங்கைக்கு கொண்டு வந்த பிறகு, சலுகை விலையில் புத்தகங்களை வழங்க முடியும்.

வரி அதிகரிப்பால் தற்போது பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள் விலை அதிகரித்துள்ளன. வெளிநாடுகளில் உள்ள பாடசாலை பழைய மாணவர்கள், உள்ளுர் பழைய மாணவர்கள் தங்கள் ஊர் பாடசாலை மாணவர்களுக்கு உதவி செய்வது பெரும் உதவியாகும்.

உண்மையான செய்திகளை உடனுக்குடன் நீங்கள் அறிந்து கொள்ள

எமது உத்தியோகபூர்வ இணையதளம் www.ultrafm.lk

எமது உத்தியோகபூர்வ புலனம்
https://chat.whatsapp.com/Hkhb8ZGCZyt3UF5fIhN4EQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *