அடுத்த வருடம் மார்ச் 20ஆம் திகதியளவில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க.
எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் ஆகும்போது உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடத்தப்பட்டு புதிய உறுப்பினர்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்படுவார்கள் என கூறியுள்ளார்.
உள்ளூராட்சி மன்ற சபைகளுக்கான புதிய அமர்வுகளை ஆரம்பிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், அதற்குத் தேவையான சட்ட ரீதியான அதிகாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, எல்லை நிர்ணயம் தொடர்பான ஆணைக்குழு நியமிக்கப்பட்டதன் ஊடாக தேர்தலை மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை என ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார்.
உண்மையான செய்திகளை உடனுக்குடன் நீங்கள் அறிந்து கொள்ள
எமது உத்தியோகபூர்வ இணையதளம் www.ultrafm.lk
எமது உத்தியோகபூர்வ புலனம்
https://chat.whatsapp.com/Hkhb8ZGCZyt3UF5fIhN4EQ