நீர்வேலி பகுதியைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று நேற்று கோப்பாய் கைதடி வீதியில் மரநடுகையில் ஈடுபடும் பொருட்டு சிரமதானப் பணியில் ஈடுபடும் திருக்கும் போது மர்மப்பொருள் ஒன்று வெடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வெடிப்பு சம்பவத்தின் போது நீர்வேலி ஊரெழுப் பகுதியைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் இருவர் காயமடைந்த நிலையில் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று, குறித்த பணியாளர்கள் வீதியை சுத்தப்படுத்தி மரங்களை வழமை போல் நட்டு, வீதிக்கு அருகில் இருந்த சிறிய மரத்தை வெட்ட முற்பட்ட போது, மரத்தின் தண்டில் மர்மப்பொருள் வெடித்ததில் அங்கிருந்த இருவரும் காயமடைந்துள்ளனர்.
உண்மையான செய்திகளை உடனுக்குடன் நீங்கள் அறிந்து கொள்ள
எமது உத்தியோகபூர்வ இணையதளம் www.ultrafm.lk
எமது உத்தியோகபூர்வ புலனம்
https://chat.whatsapp.com/Hkhb8ZGCZyt3UF5fIhN4EQ