வியட்நாம் வோங் டோ துறைமுகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பாக தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சு தலைமையில் இலங்கை கடற்படை, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வியாட்நாமில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் சிங்கப்பூரை தளமாக கொண்ட கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் என்பன ஒன்றிணைந்து கப்பலில் உள்ளவர்களை மீட்கும் பணிகளை முன்னெடுத்தன.
பயணிகளை பரிசோதிக்கும் செயற்பாடுகளை வியட்நாம் அதிகாரிகள் மற்றும் அங்குள்ள இலங்கை தூதரகத்துடன் இணைந்து குடியேரிகளுக்கான சர்வதேச அமைப்பொன்று முன்னெடுப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
உறுதிப்படுத்துவதற்கான விசாரணை செயற்பாடுகள் நிறைவடைந்ததும் அவர்களை உடனடியாக மீள நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உண்மையான செய்திகளை உடனுக்குடன் நீங்கள் அறிந்து கொள்ள
எமது உத்தியோகபூர்வ இணையதளம் www.ultrafm.lk
எமது உத்தியோகபூர்வ புலனம்
https://chat.whatsapp.com/Hkhb8ZGCZyt3UF5fIhN4EQ