T20 World Cup | டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அடிலெய்டில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் 2வது அரையிறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி போட்டிகள் தொடங்கியது. இதில் முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் -நியூசிலாந்து அணிகள் மோதின. சிட்னி மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 உலககோப்பை தொடரில் மூன்றாவது முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.
இதனையடுத்து இரண்டாவது அரையிறுதி போட்டி இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.35 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் உலகக் கோப்பை நாக் அவுட் போட்டி என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக இருந்தனர்.