அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடி இன்று (08) முதல் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நாட்களில் கால்நடை தீவன விலைகளும் குறைந்துள்ளதால், முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்படி அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்க நுகர்வோர் அதிகாரசபை சோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
உண்மையான செய்திகளை உடனுக்குடன் நீங்கள் அறிந்து கொள்ள
எமது உத்தியோகபூர்வ இணையதளம் www.ultrafm.lk
எமது உத்தியோகபூர்வ புலனம்
https://chat.whatsapp.com/Hkhb8ZGCZyt3UF5fIhN4EQ