புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சை திகதிகளில் மாற்றம் இல்லை – சுசில் பிரேமஜயந்த

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளை நடாத்துவதற்கு அறிவிக்கப்பட்டுள்ள திகதிகளில் மாற்றம் செய்யப்படாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு முன்னர் அறிவித்திருந்தது.

இதற்கிடையில், அறிவிப்பின்படி, க.பொ.த உயர்தரப் பரீட்சை 2023 ஜனவரி 23 ஆம் திகதி முதல் 2023 பெப்ரவரி 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பல கோரிக்கைகளை கருத்திற்கொண்டு புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக டிசம்பரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு இரண்டாவது மற்றும் மூன்றாவது தடவையாக அமரவிருக்கும் மாணவர்களிடமிருந்து பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகவும், அதேவேளையில் பாராளுமன்றத்தில் பொதுப் பிரதிநிதிகளும் ஒத்திவைப்புக்கு ஆதரவை தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் பின்னர், மீண்டும் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்கள் அதற்குத் தயாராகுவதற்கு மூன்று மாத கால அவகாசம் உள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

கொவிட்-19 நெருக்கடி காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைக்குரிய சூழ்நிலைகள் மற்றும் ஒன்பது மாகாணங்களில் உயர்தரப் பாடத்திட்டத்தை நிறைவு செய்தமை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த ஒத்திவைப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் கல்வி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயங்கள் அனைத்தையும் கவனத்தில் கொண்ட தன் பின்னரே புதிய பரீட்சை திகதிகள் அறிவிக்கப்பட்டதாகவும், மீண்டும் ஒத்திவைப்புக்கான புதிய கோரிக்கைகள் எதுவும் வரவில்லை என்றும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

உண்மையான செய்திகளை உடனுக்குடன் நீங்கள் அறிந்து கொள்ள

எமது உத்தியோகபூர்வ இணையதளம் www.ultrafm.lk

எமது உத்தியோகபூர்வ புலனம்
https://chat.whatsapp.com/Hkhb8ZGCZyt3UF5fIhN4EQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *