மெக்ஸிகோவைச் சேர்ந்த 2 வயதான சிறுவனொருவன் விழுங்கிய பற்றரி, வயிற்றுக்குள் வெடித்ததால் அச்சிறுவன் உயிருக்குப் போராடி வருகிறான்.
குறித்த சிறுவன் சுவாசிப்பதற்கு சிரமப்படுவதாகக் கூறி, சிறுவனை அவனின் தாயார் கெனானியா நகரிலுள்ள வைத்தியசாலைக்கு ஒக்டோபர் 23 ஆம் திகதி அழைத்துச் சென்றார்.
அச்சிறுவன் பற்றரியை விழுங்கியிருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அதன்பின், ஹேர்மோசிலோ நகரிலுள்ள வைத்தியசாலைக்கு அச்சிறுவன் அனுப்பப்பட்டான்.
அச்சிறுவனை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்துவதற்கு முன்னர், அந்த பற்றரி வெடித்துவிட்டதாகவும், இதனால், சிறுவனின் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
உண்மையான செய்திகளை உடனுக்குடன் நீங்கள் அறிந்து கொள்ள
எமது உத்தியோகபூர்வ இணையதளம் www.ultrafm.lk
எமது உத்தியோகபூர்வ புலனம்
https://chat.whatsapp.com/Hkhb8ZGCZyt3UF5fIhN4EQ