கிராம உத்தியோகஸ்தர்களுக்கு பொலிஸ் அதிகாரம்

இதுவரை பொலிஸ் நிலையத்தின் சிறிய முறைப்பாடுகள் பிரிவின் பொறுப்பதிகாரி தீர்த்து வைத்து வந்த சிறிய முறைப்பாடுகளை தீர்த்து வைக்கும் பொலிஸ் அதிகாரத்தை கிராம உத்தியோகஸ்தர்களுக்கு வழங்குவது சம்பந்தமாக அரசாங்கம் விசேட கவனத்தை செலுத்தியுள்ளது.

இதன் முதல் கட்டமாக கிராம உத்தியோகஸ்தர்கள் சமாதான அதிகாரிகளாக வலுவூட்டப்பட உள்ளனர். இதன் மூலம் கிராம உத்தியோகஸ்தர்களுக்கு இருக்கும் பொலிஸ் அதிகாரத்தை நடைமுறைப்படுத்த அவர்கள் ஊக்குவிக்கப்பட உள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள 14 ஆயிரம்
கிராம உத்தியோகஸ்தர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதால், 14 ஆயிரம் பேரை பொலிஸ் சேவைக்கு இணைத்துக்கொண்டமைக்கு அது ஈடாகும் என அரசாங்கம் நம்புகிறது.

இதன் போது பொலிஸ் அதிகாரத்திற்கு இணையான அதிகாரத்தை கிராம உத்தியோகஸ்தர்களுக்கு வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. கீழ் மட்டத்தில் உள்ள கிராம உத்தியோகஸ்தர்களை இந்த பணித்தொடர்பில் வலுவூட்ட பொலிஸ் திணைக்களத்தின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தேசிய அடையாள அட்டைகளை தொலைத்தவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டியதில்லை. இதனடிப்படையில், இனிவரும் காலங்களில் ஒருவரது தேசிய அடையாள அட்டை காணாமல் போகும் சந்தர்ப்பத்தில் அது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய வேண்டிய அவசியமில்லை. கிராம உத்தியோகஸ்தரிடம் அது தொடர்பாக முறைப்பாட்டை செய்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

அத்துடன் கிராங்களில் நடக்கும் சிறிய சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகளை பொலிஸ் நிலையத்திற்கு செல்லாது கிராம உத்தியோகஸ்தரிடம் முறைப்பாடு செய்ய சந்தர்ப்பம் கிடைக்கும். இந்த நடவடிக்கையால், மக்கள் பொலிஸ் நிலையங்களுக்கு செல்லும் சந்தர்ப்பங்கள் குறையும்.

கிராம உத்தியோகஸ்தர்களை வலுவூட்டுவதற்காக அரச நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்திடம் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்திடம் இருந்து இதற்காக முதல் கட்டமாக எட்டரை மில்லியன் ரூபா நிதி கிடைக்க உள்ளது எனவும் அந்த சிரேஷ்ட அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். 
உண்மையான செய்திகளை உடனுக்குடன் நீங்கள் அறிந்து கொள்ள

எமது உத்தியோகபூர்வ இணையதளம் www.ultrafm.lk

எமது உத்தியோகபூர்வ புலனம்
https://chat.whatsapp.com/Hkhb8ZGCZyt3UF5fIhN4EQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *