பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் துப்பாக்கிச்சூட்டில் காயம்

பாகிஸ்தானில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானின் வஜீராபாத்தில், முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரீக் இ இன்சாப்(பிடிஐ) கட்சி சார்பில் , அரசுக்கு எதிராக பேரணி நடப்பதாக இருந்தது. இதில் இம்ரான் கானும் பங்கேற்றிருநாதார்.

இந்நிலையில், வஜீராபாத்தின் ஜாபர் அலிகான் பகுதியில் இம்ரான் கான் கன்டெய்னர் அருகே, மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடந்த்தினர். அதில், இம்ரான் கான் உள்ளிட்ட 4 பேர் காயமடைந்துள்ளனர். இம்ரான் கான் உயிருக்கு ஆபத்து இல்லை எனவும், காலில் மட்டும் காயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உண்மையான செய்திகளை உடனுக்குடன் நீங்கள் அறிந்து கொள்ள

எமது உத்தியோகபூர்வ இணையதளம் www.ultrafm.lk

எமது உத்தியோகபூர்வ புலனம்
https://chat.whatsapp.com/Hkhb8ZGCZyt3UF5fIhN4EQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *