அமெரிக்க தூதரக அதிகாரியின் கைப்பை வழிப்பறி திருடர்களால் கொள்ளையடிப்பு

அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் அமெரிக்க அதிகாரியின் கைப்பை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குருதுவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தூதரகத்தில் பணிபுரியும் அமெரிக்கப் பெண் அதிகாரி குருடுவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றார்.

நேற்று மாலை அருகில் உள்ள பகுதியில் நடைபெற்ற விருந்தில் கலந்து கொள்வதற்காக அவர் தனது வீட்டிலிருந்து நடந்து சென்று கொண்டிருந்த போது, ​​மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரால் அவரது கைப்பையை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைப்பை திருடப்பட்டதும், குறித்த அதிகார் அச்சத்துடன் வீடு திரும்பியுள்ளார். இது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில், குருதுவத்தை பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவுடன் பொலிஸ் மா அதிபர்கள் பலர் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று முறைப்பாடு பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அமெரிக்க தூதரக அதிகாரியின் கைப்பையுடன் இருவரும் தப்பியோடிய மோட்டார் சைக்கிளை தற்போது அடையாளம் கணப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த இருவரையும் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *