பெரும் போகத்துக்கு தேவையை பூர்த்தி செய்ய போதியளவு யூரியா உரம் கையிருப்பில் உள்ளதுடன் 50 கிலோகிராம் யூரியா மூடை ஒன்றை 10,000 ரூபாவுக்கு பெரும்போகத்தில் விவசாயிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை 13,000 மெற்றிக் தொன் யூரியா உரம் முதன் முதலாக நாட்டை வந்தடைந்துள்ளது. இந்த சரக்கு சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்டு கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்டது.
யூரியாவை கொள்வனவு செய்ய உலக வங்கி 105 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியுள்ளது.
இந்நிலையில் பெரும் போகத்தில் விவசாயிகள் எவ்வித தயக்கமும் இன்றி விவசாயம் செய்யுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.