எண்ணெய் இறக்குமதி செய்வதாக கூறி பல மில்லியன் மோசடி – குற்றப்புலனாய்வுப் பிரிவு தகவல்

நாட்டில் உள்ள பல்வேறு கோடீஸ்வர வர்த்தகர்களிடம் பல மில்லியன் ரூபாக்களை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள திலினி பிரியமாலி, எண்ணெய் நெருக்கடியின் போது இலங்கைக்கு எண்ணெய் கொண்டு வரும் முகவராக நடித்து வர்த்தகர்களிடம் மில்லியன் கணக்கான டொலர்களை மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு எண்ணெய் இறக்குமதி செய்யும் முகவராக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், டொலர் நெருக்கடியால் எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறி வர்த்தகர்களை ஏமாற்றியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு டொலர்களை தருவதாகவும், இலங்கைக்கு எண்ணெயை இறக்குமதி செய்த பின்னர் அதனை விற்பனை செய்து அதிக இலாபம் ஈட்டலாம் எனவும் கூறி வியாபாரிகளிடம் சந்தேக நபர் ஏமாற்றியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சந்தேகநபரின் வாக்குமூலத்தின் படி பல வர்த்தகர்கள் அவருக்கு டொலர்களை வழங்கியுள்ளதாகவும், அவர் வியாபாரிகளிடம் இருந்து பெறப்பட்ட டொலர்களை மோசடி செய்துள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

60,000 அமெரிக்க டொலர்கள், 136 பவுண்கள் மற்றும் 100,000 அவுஸ்திரேலிய டொலர்களை வர்த்தகர் ஒருவர் கொடுத்துள்ளார். இரண்டு நாட்களில் இலாபத்துடன் பணத்தை தருவதாக கூறி பணத்தை பெற்றுக்கொண்டதாக வர்த்தகர் ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

செய்தி Nirujan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *