நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னர் நாளை (30) முடிவடைவதாக கூறப்பட்ட நிலையில் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது, சமுர்த்தி உறுப்பினர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் பொது உதவிப் பயனாளிகள் ஆவணங்களில் விண்ணப்பித்தவர்கள் மற்றும் பலன்களை எதிர்பார்க்கும் அனைத்து பயனாளிகளும் இந்தப் புதிய பதிவிற்குள் நுழைய வேண்டும்.

இதற்கு விண்ணப்பிக்கும் அனைத்து நபர்களும் மாதிரி விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அந்தந்த பிரதேச செயலகம், கிராம சேவையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

தற்போது நன்மைகளைப் பெறும் எந்தவொரு தரப்பினருக்கும் அதனை இழக்கும் அபாயம் இல்லை என பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை விண்ணப்ப படிவத்தில் தற்போது எந்ததெந்த நன்மைகளுக்கு அரசின் உதவியை பயனாளிகள் பெறுவது, தொகை என்பதை குறிப்பிட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *