கொழும்பு கோட்டைக்கும் கண்டிக்கும் இடையில் வார இறுதியில் சொகுசு புகையிரத சேவையொன்று எதிர்வரும் முதலாம் திகதி முதல் இயக்கப்படவுள்ளதாக வெகுஜன ஊடக மற்றும் போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
முன்கூட்டியே ஆசனங்களை முன்பதிவு செய்யும் வசதி கொண்ட இந்த சொகுசு புகையிரதம் ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் புகையிரத சேவை இடம்பெறும்
கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் கண்டியை காலை 9.18 மணிக்கு சென்றடையும் பின்னர் மாலை 4.50 மணிக்கு கண்டியில் இருந்து புறப்பட்டு இரவு 7.40 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும்.
முதல் தர ஆசனம் 2000 ரூபாவுக்கும் இரண்டாம் தர ஆசனம் 1500 ரூபாவுக்கும் முன்பதிவு செய்துகொள்ள பெறமுடியும்.
எதிர்வரும் காலங்களில் அநுராதபுரம் வரை சொகுசு புகையிரத சேவை ஆரம்பிக்கப்படும் எனவும், அது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.