யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கைதடி சித்த மருத்துவ வளாக மாணவர்களுக்கு சாவகச்சேரி பிரதேச சபையின் விசித்திரமான அன்பளிப்பு இது.
கூரை இல்லாத பேரூந்து தரிப்பிடம் ஒன்று குறித்த பல்கலைக்கழக வளாக மாணவர்கள் மற்றும் வைத்தியசாலை நோயாளிகள் பாவிப்பதற்காக A- 9 வீதியோரத்தில் அமைந்திருந்தது.
அருகே சென்று பார்த்தபோது பெயர்பலகையில் அது சாவகச்சேரி பிரதேச சபையின் அன்பளிப்பு என அவதானிக்க முடிந்தது.
அன்பளிக்கும் போது சரியான முறையில் இருந்திருக்கலாம் ஆனால் தற்போதைய நிலையை அவதானித்து புனரமைப்பு செய்ய மறந்துள்ளது பிரதேச சபை.
குடையுடன் பேருந்து தரிப்பிடத்திற்குள் நின்ற மருத்துவ மாணவிகள் இருவரிடம் இதுபற்றி கேட்டேன். தாம் பல்கலைக் கழகத்திற்கு அனுமதிபெற்று வந்ததிலிருந்து இப்படியேதான் உள்ளது என்றனர்.
அப்படியாயின் ஸ்தாபிப்பது எமது கடமை பராமரிப்பு எமது இல்லை என குறித்த பிரதேசசபை இருக்கிறதோ என்னவோ தெரியவில்லை. வீதி அபிவிருத்தி அதிகார சபைதான் இனி பொறுப்போவும் தெரியேல்ல…
நிர்வாக சட்டச்சிக்கலுகள் பற்றி எமக்கு தெரியாது

