ஒரே நாளில் தமிழில் இவ்வளவு படங்கள் ரிலீசா?

அறிமுக இயக்குனர் அசோக் வீரப்பன் இயக்கத்தில் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் படம் ‘பஃபூன்’.  இந்த படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் பேஷன் ஸ்டூடியோஸ் பேனர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.  மேலும் இந்த படத்தில் அனேகா, ஜோஜு ஜார்ஜ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர், இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.  இப்படம் செப்டம்பர்-23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  

bafoon

அடுத்ததாக சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்து உருவாகியுள்ள தமிழ் திரைப்படம் ‘ட்ரிக்கர்’ செப்டம்பர்-23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  இந்த படத்தில் தான்யா ரவிச்சந்திரன், அருண்பாண்டியன், சின்னி ஜெயந்த், அறந்தாங்கி நிஷா, ராம்தாஸ் மற்றும் அன்பு தாசன் போன்ற பலர் நடித்துள்ளனர்.  இப்படத்தை பிரமோத் பிலிம்ஸ் மற்றும் மிராக்கிள் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

ராம்நாத் பழனிக்குமார் இயக்கத்தில் கருணாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆதார்’.  இப்படத்தில் இனியா, திலீபன், அருண்பாண்டியன், ரித்விகா போன்ற பலர் நடித்துள்ளனர்.  இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருக்கிறார்.  இப்படம் செப்டம்பர்-23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

aadhar

ஃபெல்லினி.டி இயக்கத்தில் அரவிந்தசாமி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெண்டகம்’.  இப்படத்தில் குஞ்சகோ போபான், ஜாக்கி ஷ்ரோஃப், ஈஷா ரெப்பா, ஆடுகளம் நரேன் போன்ற பலர் நடித்துள்ளனர்.  இந்த படம் செப்டம்பர்-23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அஜூ கிழுமலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ட்ராமா’, பார்த்திபனின் இரவின் நிழல் படத்தை போன்று இப்படமும் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது.  இப்படத்தில் கிஷோர், ஜெய் பாலா, காவ்யா பெல்லு போன்றவர்கள் நடித்துள்ளனர்.  இப்படம் செப்டம்பர்-23ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகுகவுள்ளது. 

sep

ராமனாவ் மல்லம் இயக்கத்தில் சாய் தன்ஷிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘குழலி’.  இப்படத்தில் நானா படேகர், கல்பலதா, உத்தேஜ், கவுதம் குமார், நவீன் சஞ்சய் போன்ற பலர் நடித்துள்ளனர்.  இந்த படம் செப்டம்பர்-23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *