இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸ் (Paul Stephens) ஆகியோருக்கு இடையில் ஆரம்ப கட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது
அவுஸ்திரேலிய முதலீட்டாளர்கள் குழுவொன்றின் பங்குபற்றுதலுடன் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய மின்சார நெருக்கடிக்கு தீர்வாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் புதிய முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னுரிமை அளித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது..
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து அவுஸ்திரேலியவுடன் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க கலந்துரையாடல்!
