திடீரென பிரித்தானியாவிற்கு பறக்கவிருக்கும் இலங்கை ஜனாதிபதி!

இரண்டாவது எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வார இறுதியில் பிரித்தானியாவுக்கு செல்ல உள்ளதாக தெரியவருகிறது.

  
இதற்காக ஜனாதிபதி செயலகம், லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துடன் பயணத்திற்கான ஒருங்கிணைப்புக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மகாராணியின் இறுதிச் சடங்கு நடைபெறும் தினத்திற்கு முதல் நாள் ஜனாதிபதி லண்டன் நோக்கி புறப்பட்டுச் செல்ல உள்ளார்.

    
மகாராணியாரின் இறுதிச்சடங்குகள் எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இலங்கை அரசு அன்றைய தினத்தை தேசிய துக்க தினமாக அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தனது இந்த குறுகிய கால விஜயத்தின் போது பிரித்தானிய அரசாங்கத்தின் பிரதிநிதிகளை சந்திக்க வாய்ப்புள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்ட தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *