உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த 9ஆம் தர மாணவன்..

கடவத்த பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட தெவும் சனஹஸ் ரணசிங்க என்ற மாணவனே இவ்வாறு உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.

தெவும் சனஹஸ் ரணசிங்க வர்த்தகப் பிரிவில் தனிப்பட்ட பரீட்சார்த்தியாக உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்ததோடு, மூன்று பாடங்களிலும் B சித்திகளைப் பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.

05 மாத குறுகிய காலத்தில் பரீட்சைக்குத் தயாராகி இந்த விசேட சித்தியைப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

தெவும் சனஹஸ் ரணசிங்க இதற்கு முன்னர் 08ஆம் ஆண்டில் கல்வி கற்கும் போது சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தார்.

7 மாத குறுகிய காலத்தில் தயாராகிய தெவும் சனஹஸ் ரணசிங்க, சாதாரணத் தர பரீட்சையிலும் சித்தியடைந்திருந்தார்.

அதில் அவர் 5 A , 2 B மற்றும் ஒரு C தேர்ச்சி பெற்றிருந்தார் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

சட்டத்தரணி மற்றும் கிரிக்கெட் வீரராக வேண்டும் என்பதே தெவும் சனஹஸ் ரணசிங்கவின் இலட்சியமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *