பதிலடி கொடுத்த இந்திய அணி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் 15ஆவது ஆசிய கிண்ணத்தின் இன்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ரோஹித் சர்மா முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி ஆரம்பமே ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறி கொண்டிருந்தது,இருப்பினும் ரிஸ்வானின் நம்பிக்கையான துடுப்பாட்டம், இறுதி நேரத்தில் பந்துவீச்சாளர்களின் அதிரடி கைகொடுக்க 148 எனும் எண்ணிக்கையைப் பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

149 என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தது,
அறிமுக வீரரான 19 வயதான நஸீம் ஷா ஆரம்பம் முதலே இந்தியாவிற்கு மிகப் பெரிய தலையிடியை கொடுத்தார்.லோகேஷ் ராகுல் முதல் ஓவரிலேயே டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தார், பின்னர் கோலியையும் ஆட்டம் இழக்கச் செய்யும் அருமையான வாய்ப்பு கிடைத்தாலும் பாபர் அசாம் ஸ்லிப் திசையில் அந்த வாய்ப்பை தவறவிட்டார்.

இறுதி 5 ஓவர்களில் 52 ஓட்டங்கள் தேவை என்கின்ற நிலைமை உருவானது, பின்னர் 2 ஓவர்களில் 21 ஓட்டங்கள் தேவை என்கிற நிலைமை வந்தபோது 19-வது ஓவரை வீசிய ஹாரிஸ் ரவூப் ஓவரில் 3 பவுண்டரிகள் அடங்கலாக 14 ஓட்டங்கள் பெறப்பட்டன.அதன் பின்னர் இறுதி ஓவரை வீசிய நவாஸின் இறுதி ஓவரில் 7 ஓட்டங்கள் வெற்றிக்கு தேவையாக இருந்த போது, முதல் பந்திலேயே ஜடேஜா Bowled முறை மூலமாக ஆட்டமிழந்தார்.அதன் பின்னர் கார்த்திக் ஒரு ஓட்டம் பெற்றார், மூன்றாவது பந்துவீச்சில் ஓட்டம் பெறப்படவில்லை ,3 பந்துகளில் 6 ஓட்டங்கள் தேவை என்கின்ற ஒரு பரபரப்பான நிலை ஏற்பட்டபோது அந்த பந்தை ஹார்திக் பாண்டியா சிக்சர் அடித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்து உள்ளமை குறிப்பிடத்தக்கது .

ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற 2021ஆம் ஆண்டு டுவென்டி உலகக்கிண்ண போட்டிகளில் இந்திய பாகிஸ்தான் அணிகள் இறுதியாக முட்டி மோதிய போது பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.இன்று இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *