மன்னாரில் இந்தியாவின் அதானி நிறுவனத்தால் நிறுவப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார் நகரில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
பாரிய காற்றாலை அமைக்கப்படுவதன் காரணமாக மீன் வளம் பெரிது பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த காற்றாலை திட்டம் இங்கு வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.
இதில் மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சர்வமத தலைவர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உப தலைவர்கள், உறுப்பினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.