ஆசியக் கிண்ணத்தின் தொடக்க ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி 10.1 ஓவர்களில் 106 ரன்களைத் துரத்தி நேற்றைய நாளில் அபார வெற்றிபெற்றது, இலங்கைக்கு 2வது மிகப்பெரிய டி20 தோல்வியை அளித்தது.
நேற்றைய ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றியைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் நிகர ரன் ரேட் 5.176 உடன் பாரிய நிலையில் காணப்படுகிறது.இந்த மோசமான தோல்வி காரணமாக இலங்கை அடுத்த சுற்று வாய்ப்பை தவறவிடும் நிலைக்கு ஆளாகியுள்ளது.மோசமான நிகர ரன் ரேட் காரணமாக, இலங்கை பங்களாதேஷை வென்றாலும், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆட்டத்தின் முடிவைப் பொறுத்தே இலங்கையின் அடுத்த சுற்றுக்கான தகுதி இப்போது தீர்மானிக்கப்படவுள்ளது.

இலங்கையின் நிகர ஓட்ட விகிதம் -5.176 என்ற நிலையில் உள்ளதால் இப்போது பங்களாதேஷை பாரிய ஓட்ட வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என்பதோடு ஆப்கானிஸ்தான் அணியும் பங்களாதேஷையும் வெல்ல வேண்டும் என்ற நிலை காணப்படுகின்றது.வங்கதேசம் ஆப்கானிஸ்தானை வீழ்த்தினால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவது இலங்கை அணிக்கு கடினமாக இருக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது.