நுரைசோலை லக்விஜய அனல்மின்நிலையத்தின் அலகு 1 இல் நீராவி எடுத்து செல்லும் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு பொறியியலாளர்களால் சரிசெய்யப்பட்ட நிலையில் நேற்று மாலை மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது.
இதனையடுத்து 300 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதேவேளை நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் அலகு 2 ஆவது இயந்திரமும் பராமரிப்பு பணிகள் காரணமாக செயலிழக்கச் செய்யப்பட்டு வேலைகள் இடம்பெறுகிறது. கடந்த ஜுன் மாதம் 15 ஆம் திகதி நிறுத்தப்பட்டது.
தற்போது அலகு 1 மற்றும் அலகு 3 இன் இயந்திர தொகுதிகள் மூலம் மின் விநியோகம் தேசிய மின்கட்டமைப்பில் இணைந்துள்ளது.