எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் நாடளாவிய ரீதியில் டீசல் மற்றும் பெற்றோலை தட்டுப்பாடு இன்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 3000 மெற்றிக் தொன் பெற்றோல் மற்றும் 4000 மெற்றிக் தொன் டீசலை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
30,000 மெற்றிக் தொன் டீசல் இறக்கும் பணி தற்போது இறுதிக்கட்டத்தில் இருப்பதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மேலும் மற்றொரு ஓட்டோ டீசல் 37,300 மெற்றிக் தொன் டீசலை இறக்கும் பணி இன்று (27) பிற்பகல் ஆரம்பிக்கப்படும் என பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
பல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. இந்நிலையில் அமைச்சர் காஞ்சனா விஜசேகர ருவிட்டரில் பதிவிட்ட தகவலில் எரிபொருள் விநியோகம் மதிப்பாய்வு செய்யப்பட்டு, அடுத்த 3 நாட்களில் நாடளாவிய ரீதியில் அனைத்து எரிபொருள் கூடுதல் பங்குகளையும் விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விநியோகத்தில் ஏற்படும் குறைபாடுகள், இறக்குவதில் தாமதம் மற்றும் எரிபொருள் நிலையங்கள் மூலம் ஓடர்களுக்கான பணம் செலுத்துவதில் தாமதம் ஆகியவை நீண்ட வரிசைகளை உருவாக்கியுள்ளன. அடுத்த 2 நாட்களில் வரிசைகளை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.