சந்தர்ப்பம் கிடைக்கும் போது ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க ஐக்கிய மக்கள் சக்தி உறுதியளித்துள்ளதாக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பதவி வெற்றிடமொன்று ஏற்பட்டால் தேசியப் பட்டியல் மூலம் நியமனம் வழங்குவதற்க ஐக்கிய மக்கள் சக்தி இணங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“தேசியப் பட்டியலில் வெற்றிடமொன்று ஏற்பட்டால் முதல் தடவையாக ராமநாயக்கவை பாராளுமன்றத்திற்கு நியமிக்க நாங்கள் முழு மனதுடன் உறுதியளிக்கிறோம்” என்றும் ட்வீட் செய்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, திஸ்ஸ அத்தநாயக்க, ஹரின் பெர்னாண்டோ, இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர், எரான் விக்கிரமரத்ன, மயந்த திஸாநாயக்க மற்றும் டயானா கமகே ஆகியோர் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் ஆசனங்கள் மூலம் பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
நடிகரும் அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்கவிற்கு இன்று விசேட மன்னிப்பு வழங்கப்பட்டதை அடுத்து பிரேமதாச இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.