இலங்கையிடம் சுவிஸ் முன்வைத்த கோரிக்கை

இலங்கை அரசாங்கம் தனது சர்வதேச வாக்குறுதிகளுக்கு இணங்க வேண்டும் என சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது.
இலங்கையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் அதே வேளையில், மக்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றையும் இலங்கை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபர்க்லர் ( Dr. Dominik Furgler) தெரிவித்துள்ளார்.

அண்மைய கைதுகளின் போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்து சுவிட்சர்லாந்து கவலை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் , செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னர் அரசாங்கம் அதன் சர்வதேச வாக்குறுதிகளுக்கு இணங்க வேண்டும் என்றும் தூதுவர் டொமினிக் ஃபர்க்லர் ( Dr. Dominik Furgler)கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *