கண்டியில் இருந்து பதுளை நோக்கி சரக்குகளை ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரண்டதால் மத்திய மலை நாட்டிற்கான ரயில் சேவையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த 1126 சரக்கு ரயிலின் பெட்டியொன்று ரொசல்ல புகையிரத நிலையத்திற்கு அருகில் கவிழ்ந்துள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இருந்து பதுளைக்கு இயக்கப்படும் ‘பொடி மெனிகே’ புகையிரதமும், பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் ‘உடரட மெனிகே’ புகையிரதமும் ரொசெல்ல புகையிரத நிலையத்திற்கு பயணிக்கவுள்ளன.
இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.