முகநூல் ஒன்றில் இந்த பதிவினை பார்வையிட்டேன். உண்மையிலே வேதனைக்குரிய விடயம். இந்த விடயம் தொடர்பாக நாம் எமது நீதிக்கான குரல் நிகழ்ச்சி மூலம் இதற்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள தாயாராக இருக்கின்றோம். தூய்மைத் திட்டத்திற்கு என ஒதுக்கப்பட்ட நிதிக்கு என்ன ஆனது????
காலை பரந்தனிலிருந்து முல்லைத்தீவு செல்வதற்கு பேருந்திற்காக காத்திருந்தேன். பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் நின்ற வண்டில் சிற்றுண்டிக் கடையில் சம்பல்வடை வாங்கி உண்டபின் அவர் தந்த பொலித்தீன் பையை இடுவதற்கு “டஸ்ற்பின் இருக்கிறதா” என கேட்டேன் அப்போது அந்த வண்டில் வியாபாரியின் மகன் “சும்மா உதில எறியுங்களேன்… பரந்தனே ஒரு டஸ்ற்பின் தான்” என்றான்.
அது அவனது மனக்குமுறலாக இருக்கலாம். பார்த்தேன் பரந்தன் சந்திப்பகுதி அந்த பையன் சொன்னது போலவே இருந்தது. சுற்றிப் பார்த்தேன் கண்ணுக்கெட்டிய இடங்களில் குப்பைத் தொட்டி என எதையுமே காணவில்லை. வண்டில் கடைக்காரர் என்னிடமிருந்த பொலித்தீனை தானே வாங்கிகொண்டார். நான் அந்த இடத்திலிருந்து சென்றபின் அதை அதே இடத்தில் வீசுவதை தவிர அவருக்கு வேறு வழியில்லை.
கரைச்சிப் பிரதேச சபையின் அதிகார எல்லையில் இருக்கும் பரந்தன் நகரின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதன் உள்ளூராட்சி அமைப்பான கரைச்சி பிரதேச சபையின் பொறுப்பாகும்.
இதுக்குள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகாரவரம்பு போதாது எண்டு கத வேற…