இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு இன்று அதிகாலையும் 8 பேர் அகதிகளாக தஞ்சமடைந்தனரென இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் இருந்து தமிழகம் நோக்கி படகில் ஏற்றிச் செல்லப்பட்ட 8பேர் தனுஷ்கோடியில் இறங்கியிருந்த நிலையிலேயே தமிழக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
8 பேரில் 3 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் 3 சிறுவர்கள் அடங்குகின்றனர். இதேநேரம் நேற்றைய தினமும் எண்மர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.