யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் 2020ம் ஆண்டுக்கான பரிசுத்தினம் இன்று (19.08.2022) கல்லூரி அதிபரின் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவரும் விஞ்ஞானியுமான பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக கௌரவ கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்களும் மற்றும் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் , யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்களும் கலந்து கொண்டனர்.