யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் தீலிபன் நினைவாலயம் கடந்த சில நாட்களாக தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையினால் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக தியாகதீபம் தீலிபன் நினைவாலயத்தின் சுற்று வட்ட இரும்பு வேலிகளுக்கு வர்ணம் பூசும் வேலைத்திட்டம் இன்று நடைபெற்றது.
இதன் போது அவ்விடத்திற்க்கு வருகைதந்த மக்களும் பார்வையிட்டு தங்கள் ஆதரவினை வழங்கினார்கள்.
சம்பவத்தை அறிந்த யாழ் மாநகர சபையின் பிரதி மேயர் து. ஈசன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் தன்னுடைய ஆதரவினையும் தெரிவித்தார்.