ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (19) காலை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்து மூத்த நடிகர் திரு.ஜாக்சன் அந்தோனியின் நலம் விசாரிப்பதற்காக சென்றுள்ளார்.
ஜனாதிபதி வைத்தியசாலைக்கு வந்ததும், திரு.ஜாக்சன் அந்தோணியின் மனைவி உரையாடலில் ஈடுபட்டதுடன், திரு.அந்தோனியின் எதிர்கால சிகிச்சைக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் உடனடியாக தமக்கு அறிவிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.