நுவரெலியாவில் உள்ள சிறு ஓடையொன்றில் இருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் கடந்த 03 ஆம் திகதி காணாமல் போயுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவிக்கின்றன.
20 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் விறகு தேட சென்ற போது தவறி நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்படி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.