”ஆகாசவாணி! செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி ”
போர்க்காலத்தில் எல்லா செய்திகளையும் செவிமடுக்கும் வழக்கத்தை கொண்டிருந்த ஈழத்தமிழர், இந்த காந்தக்குரலை கேட்காமல் விட்டிருக்கவே முடியாது..
வீட்டில் வானொலி இயக்கும் பொறுப்பு , நேரத்திற்கு செய்திகளை கேட்கவைக்கும் பொறுப்பு என்னுடையதென்பதால் , இந்த கம்பீரக் குரலை கேட்டு பழகிப்போனவன்..
அகில இந்திய வானொலியின் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளரான சரோஜ், ஒளிபரப்புத் துறையில் பெண்களுக்கு முன்னோடியாக இருந்தார்.
அந்த கணீர் குரலுக்கு சொந்தக்காரர் இன்று இவ்வுலக வாழ்விற்கு விடைகொடுத்தார்..
சரோஜ் நாராயணஸ்வாமி இன்று மும்பையில் காலமானார். அவருக்கு வயது 87.
1970-களின் பிற்பகுதியிலும் 1980-களின் முற்பகுதியிலும் பிறந்தவர்களுடைய முக்கிய பொழுதுபோக்கு என்பது விளையாட்டைத் தவிர்த்து வானொலி (Radio) கேட்பதாகவே இருந்திருக்க முடியும். அந்த அளவுக்கு அந்தக் காலத்தவர்களின் வாழ்வோடும் வானொலி நேரடித் தொடர்பில் இருந்தது. வானொலி நிகழ்ச்சியில் முக்கியமானது, மறைந்த தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ’இன்று ஒரு தகவல்’ என்ற நிகழ்ச்சி. வானொலிக்கென ஒரு தனிப்பட்ட பேச்சு வழக்கு மொழி பயன்படுத்தப்பட்ட காலகட்டத்தில் எளிய தமிழில் பக்கத்து வீட்டுக்காரரின் பாவனையுடன் வட்டார வழக்கில் தினமும் ஒரு தகவலை மிக சுவாரஸ்யமாக சொல்லுவார்.
அதை அடுத்து”ஆகாசவாணி! செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி ” தான்..
நினைவுகள் மரணிக்காது… ஆழ்ந்த அனுதாபங்கள்…!