காலிமுகத்திடல் போராட்டம் ஓய்ந்தது

 காலிமுகத்திடல் பகுதியில் கடந்த 125 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் அங்கிருந்து வாபஸ் பெறப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த இடத்தை விட்டு சென்றாலும் போராட்டம் ஓயாது என நடிகை திருமதி தமிதா அபேரத்ன காலியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

உடல் ரீதியாக போராட்ட களத்தை விட்டு வெளியேறினாலும் போராட்டம் ஓயவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசுக்கெதிரான இன்றைய போராட்டத்தில் மக்களை சுனாமியாக கொழும்புக்கு வருமாறு கோரப்பட்ட போதிலும் இன்று காலி முகத்திடலில் மக்கள் எவரும் ஒன்றுதிரளவில்லை.இதனால் போராட்டம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.

காலி முகத்திடலில் மக்கள் ஆரம்பித்த போராட்டமே இன்று கோட்டாபய சிங்கப்பூரில் அடைக்கலம் கோருவதற்கும் சிறிலங்கா அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பதற்கும் வழிவகுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் போராட்டகாரர்கள் தற்போது காவல்துறையினரால் தேடித் தேடி கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *