இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினுக்கு இன்று (திங்கட்கிழமை) பிணை வழங்கப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் நீதிமன்றம் அவரை பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
ஜோசப் ஸ்டாலின் நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதற்காக ஓகஸ்ட் 3ம் திகதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதுடன், ஓகஸ்ட் 4ஆம் திகதி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் ஓகஸ்ட் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்று அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.