மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நிறைவுக்கு வந்துள்ளது.
இந்த தொடரின் ஐந்தாவது இறுதியுமான இன்றைய போட்டியில் 88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா தொடரை 4-1 என கைப்பற்றியது .
முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இன்று அணித்தலைவராக பாண்டியா விளையாடினார், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 188 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.189 எனும் இலக்குடன் ஆடிய மேற்கிந்தியதீவுகள் அணி 100 ஓட்டங்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
இந்த போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒரு அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றிய முதல் சந்தர்ப்பமாக இந்த சந்தர்ப்பம் பதிவானது.அக்சர் படேல் (3), பிஷ்னோய்(4), குல்தீப் யாதவ்(4) ஆகிய பந்துவீச்சாளர்கள் 10 விக்கெட்டுகளை கைப்பற்ற ஒரு உலக சாதனையுடன் ஒரு வெற்றியை இந்தியா பதிவு செய்ததுடன் 4-1 என தொடரை கைப்பற்றியுள்ளது.