எரிபொருள் மற்றும் ஏனைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே சீன ஆய்வுக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இந்த கப்பல் வேறு எந்த நோக்கத்திற்காகவும் வரவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (2) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடினமான காலங்களில் இலங்கைக்கு உதவ இந்தியா, சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் இணைந்து செயற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாகவும் அமைச்சர் கூறினார்.