2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது எரிபொருளை கொள்வனவு செய்வதற்கென 4 பில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படுவதாக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாள் ஒன்றுக்கு 700 கோடி ரூபா எரிபொருளுக்கென செலவாவதாக அமைச்சர் அமைச்சரவை முடிவு ஊடக சந்திப்பில் குறிப்பட்டுள்ளார்.அதன்படி, அனைவரும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அமுல்படுத்தப்பட்டதன் மூலம் எரிபொருளுக்கான வரிசைகள் இதுவரை குறைந்துள்ளதாகவும் பந்துல குணவர்தன தெரிவித்தார்.