ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை திருடியவர் கைது

ஜூலை 09 ஆம் திகதி ஜனாதிபதியின் இல்லத்தில் இருந்து ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை திருடிய 54 வயதான நபர் ஒருவர் Dam Street பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் இருந்து திருடப்பட்ட ஜனாதிபதியின் கொடியை அந்த நபர் படுக்கை விரிப்பாக பயன்படுத்திய வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது.

கைது செய்யப்பட்டவர் Samagi Sevaka Sangamaya வின் முன்னாள் உப தலைவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபரின் வாக்குமூலத்தை அடுத்து ஜனாதிபதியின் கொடியை பொலிஸார் மீட்டெடுக்க உள்ளனர். கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.( dailymirror)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *