சிறந்த உணவே சிறந்த எதிர்காலம்

British Council அனுசரணையுடன் யாழ்ப்பாணப் பல்கலைகழகம் முன்னெடுக்கும் Going Global Partnerships – UNICYCLE 2022 நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், “சிறந்த உணவே சிறந்த எதிர்காலம்” (Better Food Better Tommorow) எனும் தொனிப்பொருளில் சத்துக்குறைபாடான முன்பள்ளிச் சிறார்களின் ஊட்டச்சத்து அளவை அதிகரிக்கும் நோக்கில், குறைந்த செலவில், பாரம்பரிய சத்துணவுகளை தயாரிக்கும் நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சி இரணைமடு சாந்தபுரம் கிராமத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது . நடைபெற்று முடிந்த விழிப்புணர்வு நிகழ்வைத் தொடர்ந்து, முன்பள்ளிச் சிறார்களின் பெற்றோர்கள் , முன்பள்ளி ஆசிரியர்கள் , மற்றும் கிராம மக்களுக்கு பாரம்பரிய சத்துணவு தயாரிக்கும் செயன்முறை நிகழ்வு 23/07/2022 (சனிக்கிழமை ) அன்று கிளி/சாந்தபுரம் பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது . இதில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார திணைக்கள குடும்ப நல உத்தியோகத்தர்கள் ,பல்கலைகழக பேராசிரியர், பல்கலைகழக மாணவர்கள் , முன்பள்ளி ஆசிரியர்கள் , முன்பள்ளிச் சிறார்களின் பெற்றோர்கள் , சிறார்கள் , கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *