சிறப்பான செய்தி இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனம் – வடக்கு.

அனைத்து வடமாகாண எரிபொருள் நிரப்பு நிலைய முகவர்களுக்குமான அறிவித்தல்…!

25.07.2022 ஆம் திகதியிலிருந்து எரிபொருள் விநியோகம் இடம்பெறும் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும், வாகனங்களின் இறுதி இலக்க அடிப்படையில், QR முறைமை மூலமே வாகனங்களுக்கு எரிபொருளை விநியோகிக்குமாறு அறிவுறுத்துவதுடன், தாங்கள் QR முறைமை மூலம் விநியோகிக்கும் எரிபொருளின் அளவு, கணனி ஒன்லைன் வலையமைப்பு மூலம் எமது தலைமைக் காரியாலயத்தினால் கண்காணிக்கப்படும் என்பதனை அறித்தருகிறோம். அத்துடன், தாங்கள் கொள்வனவு செய்யும் ஒவ்வொரு 6,600 லீற்றர் எரிபொருள் லோட்டையும் (Bowser Load), QR முறைமை மூலம் விநியோகிக்கும் எரிபொருள் அளவில் ஒப்பிட்டு, அதில் ஏதாவது வேறுபாடு காணப்பட்டால், தாங்கள் அடுத்த எரிபொருள் கொள்வனவு கட்டளைகளை (Purchase Order) சமர்ப்பிக்க முடியாதென எமது தலைமைக்காரியாலத்தினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

CPC – North,
25.07.2022.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *