எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்த க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் எல்.எம்.டி. தர்மசேன கருத்து தெரிவிக்கையில், பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு உக்கிரமடைந்து இருந்தது. அதன் காரணமாக க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், தற்போது விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் மீள ஆரம்பதற்கு தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி முதல் குறித்த விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. இருப்பினும் முதற்கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது என்றார். இருப்பினும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில்,
தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட மதீப்பிட்டு பணிகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் விடைத்தாள் பணிகளில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொடுக்க முறையான நடைமுறையினை பின்பற்றுமாறு கோரிக்கை விடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.