இது தொடர்பில் சுகாதார திணைக்களங்கள் ஏற்கனவே தீவிர கவனம் செலுத்தி வருவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
வைரஸ் பரவல் மற்றும் ஏனைய நாடுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இந்நாட்டு சுகாதார திணைக்களங்கள் தற்போது ஆய்வு செய்து வருவதாக வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி பதிவாகும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கைகள் மற்றும் தேவையான வசதிகளை சுகாதார அமைச்சு ஏற்கனவே தயாரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்தார்.