இலங்கை போக்குவரத்து சபை சாலைகளில் தனியார் பேருந்துகள் எரிபொருள் பெறும்போது பாரிய பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்நிலையில் உரியமுறையில் எரிபொருள் தமக்கு வழங்கமையையடுத்து யாழ்ப்பாணம் மாவட்ட தனியார் பேருந்து உள்ளூர் மற்றும் வெளியூர் சேவைகள் நாளை இடம்பெறாது. திங்கள் கிழமையும் தமக்கு எரிபொருள் வழங்கப்படாவிடின் பஸ் சேவைகள் இடம்பெறாது என பஸ் கம்பெனிகளின் இணைதலைவர் பொ.கெங்காதரன் தெரிவித்துள்ளார்.
மேலும் யாழ்ப்பாணம் மாவட்ட செயலருடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னும் எரிபொருளை பெறுவது தோல்வியில் முடிந்துள்ளது.
இதேவேளை இ.போ.ச. பேருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட 57 வழித்தட இ.போ.ச பேருந்தின் சாரதி மற்றும் காப்பாளர் இருவரும் கல்கமுவ சாலை இ.போ.ச சாலை ஊழியர்களினால் தலாதகம எனும் பகுதியில் தாக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலைக் கண்டித்தும், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை ஊழியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
எனினும் தாக்குதலை நடாத்திய ஊழியர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாகவே நாளையும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.