கிராம அலுவலர் பிரிவு அடிப்படையில் எரிபொருள் தொடர்ந்து வழங்கப்படும்!

யாழ்ப்பாணம் தென்மராட்சி நுணாவில் IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக கிராம அலுவலர் பிரிவு அடிப்படையில் தொடர்ந்தும் எரிபொருள் வழங்கப்படுமென நுணாவில் IOC எரிபொருள் நிரப்ப நிலையத்தின் உரிமையாளர் வை. சிவராசா தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் தென்மராட்சி பிரதேசத்திலுள்ள கிராம அலுவலர் பிரிவுகளுக்கு எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பெற்றோல் விநியோகம் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை
J/315
J/316
J/317
J/318
J/319
J/320
J/321
J/322
ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுக்கு பெற்றோல் வழங்கப்பட உள்ளது.

மேலும் தென்மராட்சி பிரதேசத்தின் அயற் கிராமங்களான
புத்தூர் கிழக்கு J/278
வாதரவத்தை J/280 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுக்கும் செவ்வாய்க்கிழமை பெற்றோல் வழங்கப்படவுள்ளது.

எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்கிழமை தென்மராட்சிப் பிரதேசத்தின்
J/323
J/324
J/325
J/326
J/327
J/328
J/329
J/330
ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுக்கு பெற்றோல் வழங்கப்படுமென நுணாவில் IOC எரிபொருள் நிரப்ப நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.

தென்மராட்சி பிரதேசத்திலுள்ள 60 கிராம அலுவலர் பிரிவுகளுக்கும் சுழற்சி முறையில் தொடர்ந்தும் பெற்றோல் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்

இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு வருகை தரும் போதும் மாவட்ட செயலகத்தால் வழங்கப்பட்ட எரிபொருள் நிரப்பு அட்டையை வைத்திருத்தல் அவசியமானதாகும் எனவும் வை.சிவராசா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *