யாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலை வடக்கு, சுடரொளி முன்பள்ளி மாணவர்களின் கல்விக் கண்காட்சி அண்மையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் தென்மராட்சி கல்வி வலய முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி ச.அரியநாயகம், சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற சமுதாயஞ்சார் சீர்திருத்த உத்தியோகத்தரும், ஊடகவியலாளருமான க.ரஜனிகாந்தன், சுடரொளி சனசமுக நிலையத்தின் தலைவர் யோ.தயாபரன், செயலாளர் தனுசன் ஆகியோர் விருந்தினராக கலந்து சிறப்பித்தனர்.
முன்பள்ளி மாணவர்களின் கல்விசார் கைப்பணி பொருட்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன.


